ஜெயலலிதா சென்றால் அதிரும் .. பன்னீர் செல்வம் சென்றால் இப்படியா? டெல்லியில் நடந்தது என்ன?

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் நள்ளிரவு 11.30 மணி அளவில் இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

அவர் இறந்த சில மணி நேரங்களிலே அதிமுகவின் முதல்வராக ஒ.பன்னீர் செல்வம் தெரிவு செய்யப்பட்டார். அண்மையில் சென்னையில் ஏற்பட்ட வர்தா புயல் காரணமாக அதற்கு நிதி உதவி கோரி பிரதமரை சந்திக்க பன்னீர் செல்வம் சென்றிருந்தார்.

முன்பு முதல்வராக இருந்த ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமரை சந்திக்க போகிறார் என்றால், டெல்லியே ஒரு பரபரப்பாக காணப்படும். அதுமட்டுமின்றி அவர் டெல்லி வருகிறார் என்றால் அமைச்சர்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு அப்பாய்ண்ட்மெண்ட் வாங்குவார்கள்.

மத்திய அரசால் கூட்டப்படும் முதல்வர்கள் ஆலேசனைக் கூட்டத்துக்கு சென்றாலும் ஜெயலலிதாவுக்கு தனி மரியாதைதான். அத்தனைத் தலைவர்களும் அவரிடம் வந்து பேச ஆர்வம் காட்டுவார்கள்.

டெல்லிக்கு ஜெயலலிதா சென்றால் மற்ற முதலமைச்சர்களுக்கு கிடைக்கும் மரியாதையை விட சற்று அதிகமே கிடைக்கும். ஜெயலலிதாவுக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து பலரும் ஆச்சரிமடைந்திருப்பதாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தெரிவித்திருந்தாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி அகில இந்திய ஊடகமே ஜெயலலிதாவின் பேட்டிக்காக தவம் கிடக்கும். இப்படி இருந்த டெல்லி தற்போது முதல்வராக பதவி ஏற்று டெல்லி சென்ற பன்னீர் செல்வத்தின் நிலைமை எப்படி இருந்தது தெரியுமா.

பன்னீர் செல்வத்தைப் போலவே டெல்லியும் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் வருகிறார் என்கிற எந்த பதற்றமும் இல்லாமல் டெல்லி விமான நிலையம் இயங்கிக் கொண்டிருந்தது.

தமிழக முதல்வரின் டெல்லி வருகையைப் பதிவு செய்ய தமிழ் ஊடகங்களைத் தவிர வேறு எந்த வடக்கத்திய மீடியாக்களும் ஆர்வம் காட்டவில்லை.

சாலைகளில் கெடுபிடி எதுவும் இல்லை. தமிழக முதல்வரிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்க வேண்டுமென்ற எண்ணம் எந்த மத்திய அமைச்சர்களுக்கும் வரவில்லை. தமிழ்நாடு இல்லத்தில் எந்த பரபரப்பும் காணப்படவில்லை என கூறப்படுகிறது.