மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு வர வாய்ப்பே இல்லை என்று அப்பல்லோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது குறித்து சமூகவலைத்தளங்களில் ஒரு விவாதமே சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் ரெட்டி கட்டுரை ஒன்றை எழுதியதாக கூறப்படுகிறது.
அதில் அவர், ஜெயலலிதா மரணமடையும் ஒருநாள் முன்பு தான் ஹைதராபாத் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது.
அப்போது தான் ஜெயலலிதாவை சந்தித்தாகவும், ஜெயலலிதாவிடம் ஹைதரபாத் சென்று திரும்பி வந்தததும் நீங்கள் எழுந்து நடமாடுவீரகள் என்று கூறிவிட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி ஹைதராபாத்தில் இருந்து வந்ததும் ஜெயலலிதாவை டிஸ்சார்ஜ் செய்துவிடலாம் என யோசித்தவாறு தான் சென்றதாகவும் கூறியுள்ளார். ஆனால் அங்கிருந்து வந்ததும் ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் என்று கேட்டதும் நான் நொறுங்கிப் போனேன்.
காரணம் ஜெயலலிதாவின் இதயத்தில் கார்டியாக் அரெஸ்ட் வருவதற்கான எந்த அறிகுறியும் அது வரை தென்படவில்லை.
இத்தனைக்கும் இதய நோய் நிபுணர் ஒருவர் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தார் என பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.