ஜெயலலிதா பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை…தவறான மருந்தே காரணம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி திடீர் மாரடைப்பால் காலமானார். ஆனால் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடக செய்தியாளரான பர்கா தத் ன் Twitter Account மற்றும் Email Account லெஜியோன் என்ற குழுவால் கடந்த வாரம் ஹாக் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இவரின் அக்கோண்ட் ஹேக் செய்யப்பட்டதை அந்த செய்தி நிறுவனமும் உறுதி செய்தது.

தற்போது ஹேக்கிங் செய்யப்பட்டதை அந்த லொஜியன் குழு வெளியிட்டுள்ளதாகவும் அதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அப்பல்லோ ரெட்டியின் சகோதரிகளில் ஒருவர் தன்னிடம் கூறியதாக சில தகவல்களை பர்கா தத் தனது சீனியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்.

அதை தான் லெஜியோன் குரூப் ஹேக் செய்து வெளியிட்டுள்ளது. அவரின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்வதற்காக முதலில் அவரின் மின்னஞ்சலை ஹேக் செய்துள்ளது லெஜியோன் குரூப் அதில் தான் இந்த மின்னஞ்சல் இருந்ததாக கூறப்படுகிறது.

அதில், ஜெயலலிதா தற்போது உள்ள சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தற்போது நேரத்தை தள்ளிப்போட்டு மக்களை தயார்படுத்துவது தொடர்பானவை தான் நடந்து கொண்டிருக்கிறது.

ஜெயலலிதாவின் உடல்நிலையில் எந்த ஒரு பாசிடிவ் ரியாக்‌ஷனும் இல்லை, இது வெளியிடுவதற்காக அல்ல உங்களின் தகவலுக்கு மட்டுமே என கூறியுள்ளார்.

மேலும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்பே சர்க்கரை நோய்க்காக அவருக்கு தவறான மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

இது நடப்பதற்கு முன்பு அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அவரின் இதயமும், நுரையீரலும் கருவியின் மூலம் இயக்கப்படுகின்றது என கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அந்த மின்னஞ்சல் தொடர்பாக அனுப்பிய குறுந்தகவலையும் வெளியிட்டுள்ளது. தற்போது இது இணையத்தில் வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.