ரிழவு கோளறு உள்ளவர்கள் உடல் நலத்தின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் காரணத்தால், சிறுநீரக கோளாறு, கால்களில் பிரச்சனை, கண் பார்வை குறைபாடு / இழப்பு என பல பாதிப்புகள் உண்டாக நிறைய வாய்ப்புகள் உள்ளன.
முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்கு கண் பார்வையில் தான் அதிக தாக்கம் உண்டாகும். எனவே, கண் பார்வை மீது அக்கறை அதிகமாக தேவைப்படும்…
டயாபெட்டிக் ரெட்டினோபதி
நீரிழிவு காரணமாக பாதிக்கப்படும் உறுப்புகளில் முதன்மையானது கண் பார்வை. இது கண்ணை பல வகைகளில் பாதிக்கும் தன்மை கொண்டது ஆகும். பெரும்பாலானோருக்கு டயாபெட்டிக் ரெட்டினோபதி கண் பாதிப்பு எனும் சர்க்கரை நோயால் உண்டாகிறது.
கண்ணழுத்த நோய்
நீரிழிவால் அதிகரிக்கும் கண் பிரச்சனை காரணத்தால் கண்ணழுத்த நோய் உண்டாகலாம்.
முன்பெல்லாம் நீரிழிவு காரணத்தால் கண்பார்வை இழப்பு பிரச்சனைகள் நிறைய நேர்ந்துக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது இந்தியாவில் இது தடுக்கக்கூடிய / கட்டுப்படுத்தக்கூடிய அளவிற்கு வந்துள்ளது.
கண்கள் சிவந்து..
நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள் எதிர்கொள்ள நேரிடும் கண்பார்வை பிரச்சனைகள்… கண்கள் சிவந்து, கண் இமைகள் வீங்குதல். இதனால் கண் இமைக்குள் சுரக்கும் எண்ணெய் படிமத்தின் உற்பத்தி தடைப்பட்டு போகும்.
கண் பார்வை மங்குதல்
கண் பார்வை மங்குதல், பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பிரச்சனை இது. இதை ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரிடம் பார்த்து பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தான் இந்த பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இரத்தம் வழிதல் டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு கண்களில் இரத்தம் வழிதல் பிரச்சனை உண்டாகலாம். இது ரெட்டினாவில் ஏற்படும் தாக்கத்தால் உண்டாகிறது.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? 30 வயதுக்கு முன்னரே நீரிழிவு கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்கள் நீரிழிவு ஏற்பட்ட ஐந்து வருடதிற்குகுள் கண் பார்வை மருத்துவரை பார்த்து பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.
சில மாதங்களிலேயே முப்பது வயதுக்கு மேல் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருந்தால் சில மாதங்களிலேயே கண் பார்வை மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது கட்டாயம்.
பெண்கள் கருத்தரித்திருந்தால், நீரிழிவு நோய் உள்ள பெண்கள் கருத்தரித்திருந்தால், முதல் மூன்று மாதங்களிலேயே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரக / கால்களில் கோளாறுகள் ஒரு வேளை உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு அதிகரித்து, சிறுநீரக / கால்களில் கோளாறுகள் ஏற்பட்டிருந்தால் உடனடியாக் கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.
எப்படி கட்டுப்படுத்துவது?
நீரிழிவு நோயாளிகள் கண் பார்வை குறைபாடு உண்டாகாமல் எப்படி கட்டுப்படுத்த… இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீரக ஆரோக்கியத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். சீரான இடைவேளையில் மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.