சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு ஹெலிகொப்டரில் வருகை தருவதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
உறுப்பினர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்கள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சொகுசு வாகனங்களை தானும், அமைச்சர் ஹர்ஷ டி சில்வா மற்றும் பாலித தெவரப்பெரும ஆகியோரே நிராகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அலுவலக கொடுப்பனவுகளையும் நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தயா கமகே, அனோமா கமமே, விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மேலும் சில அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு ஹெலிகொப்டரில் வருகை தருவதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.