மஹிந்த அரசே காரணம் : பொறுமையாக இருங்கள் : நிதி அமைச்சர்

வரி அதிகரிப்பு தற்காலிகமானது எனத் தெரிவித்துள்ள நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மக்கள் அனைவரையும் பொறுமையாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாகவே எமக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையிட்டு நாம் கவலையடைகின்றோம். இருப்பினும் இது தற்காலிகமானது எனவும் கூறியுள்ளார்.

இந்த தற்காலிக வரி அதிகரிப்பு குறித்து மக்கள் பொறுமையாக இருக்கவேண்டும். எம்மீது நம்பிக்கை வையுங்கள் எனவும் நிதி அமைசிசர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.