கருணாநிதி நலம்… சனிக்கிழமை டிஸ்சார்ஜ் : ஸ்டாலின்!

திமுக தலைவர் கருணாநிதி மூச்சு திணறல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சுவாச கோளாறு தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்புகளுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செயற்கையாக சுவாசிக்க, தொண்டையில் துளையிட்டு, ட்ராக்கியோஸ்டமி சிகிச்சை தரப்படுகிறது.

ஞாபக மறதி நோய் இருப்பதால், அதற்கான நரம்பியல் சிகிச்சையும் தொடர்கிறது. மருத்துவமனையில் உள்ள கருணாநிதியை இன்னும் சில தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காவேரி மருத்துவமனை வாசலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தலைவர் கருணாநிதியின் உடல் சீராக உள்ளது. நலமடைந்து வருகிறார். வரும் சனிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்தார்.