ஜிம் பாடியில் கும்மென்று இருக்கும் அஜீத்: தீயாக பரவிய தல 57 போட்டோ!

தல 57 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜீத்தின் புதிய புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தல 57.

படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆஸ்திரியா தல 57 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஆஸ்திரியாவில் நடந்தது.

அப்போது உள்ளூர் ஊடகங்கள் அஜீத்தின் கெட்டப்பை புகைப்படம் எடுத்து வெளியிட்டன. பைக் சாகசம் அஜீத் பல்கேரியாவில் பைக் சாகசம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளங்களில் வெளியாகியது. அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

வீடியோ அஜீத் பைக்கில் சாகசம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது. வீடியோவும் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. அஜீத்தின் பைக் சாகசத்தை பைக் சாகசம் செய்யும் வீரர் ஒருவர் புகழ்ந்திருந்தார்.

புகைப்படம் அஜீத் ஜிம் பாடியுடன் கும்மென்று நிற்கும் புகைப்படத்தை இயக்குனர் சிவா வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் பற்றி பேசி அதை ட்விட்டரில் டிரெண்டாக விட்டுவிட்டனர் தல ரசிகர்கள்.