ரூ.5 கோடி வருமானத்தை மறைத்ததாக ராம மோகன ராவின் மகன் விவேக் ஒப்புதல்!

ரூ.5 கோடி வருமானத்தை மறைத்ததாக தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவிவ் மகன் விவேக் ஒப்புக்கொண்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் விவேக்கிடம் 17 கோடி கைமாறியதற்கான ஆதாரம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதலே அதிரடி ரெய்டு நடத்தினர்.

சென்னை திருவான்மியூரில் உள்ள ராம மோகன் ராவ்வின் மகன் விவேக் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு ஏராளமான நகைகள் கைபற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ராம மோகன ராவ் மகன் மற்றும் உறவினர் வீட்டில் இருந்து ரூ. 30 லட்சம் மதிப்புள்ள புதிய ருபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரூ.5 கோடி வருமானத்தை மறைத்ததாக ராம மோகன ராவின் மகன் விவேக் ஒப்புதல் அளித்துள்ளதாக வருமான வரித்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

ராம மோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக்கிடம் 17 கோடி கைமாறியதற்கான ஆதாரம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சோதனை இன்று இரவும் தொடரும் எனவும் வருவான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.