விதிகளை மீறிய 5 வெளிநாட்டு வங்கிகளுக்கு அபராதம்: ரிசர்வ் வங்கி நடவடிக்கை!

வங்கி விதிமுறைகளை மீறியதற்காக 5 வெளிநாட்டு வங்கிகளுக்கு, அந்நிய செலவாணி சட்டப்படி ரூ 60,000 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளின் நடைமுறையில் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அவற்றை பின்பற்றாமல் இருந்த 5 வெளிநாட்டு வங்கிகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் அமெரிக்கா, பேங்க் ஆப் டோக்கியோ மிட்சுமிஷி, டியூட்ஸ்செ பேங்க், ஸ்காட்லாந்து ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, ராயல் பேங்க் ஆகிய வங்கிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20,000 ஆயிரம் வரை மொத்தம் ரூ.6,000 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்திய செலவாணி சட்டப்படி இது குறித்து விளக்கம் அளிக்கவும் அந்தந்த வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய அளவில் உள்நாட்டு வங்கிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு வங்கிகளின் செயல்பாட்டையும் அனைத்து வங்கிகளையும் தொடர்ந்து தீவிரவமாகக் கண்காணித்து வருவதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.