விமானத்தில் ஆணு­றுப்பு உணவாக கொடுக்கப்பட்டதா?

அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த பெண் ஒருவர், விமா­னத்தில் பயணம் செய்த போது, தனக்கு உணவுப் பொருட்­களில் ஒன்று விநோ­த­மான உரு­வத்தில் இருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார்.

இதன்­போது தனக்கு உண்­ப­தற்­காக வழங்­கப்­பட்ட உணவுப் பொதியில் 6 டப்­லிங்ஸ்­க­ளுடன் விசித்­தி­ர­மான உண­வொன்றும் இருந்­தது. இந்த உண­வுப்­பொருள் ஆணு­றுப்பு போன்ற உரு­வத்தில் இருந்­ததால் தான் அதிர்ச்ச்­சி­ய­டைந்­த­தாக அப் பெண் தெரி­வித்தார்.

அப் பெண் மேற்­படி உண­வு­களை படம் ­பி­டித்து சமூக வலைத் ­த­ளங்­க­ளிலும் வெளி­யிட்­டுள்ளார். உணவுப் பொதி­யி­லி­ருந்த 6 டப்­லிங்ஸ்­க­ளையும் தான் உட்­கொண்­ட­தா­கவும் அவை சுவை­யாக இருந்­த­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளர்.

எனினும், விசித்­திர தோற்­றத்­தி­லி­ருந்த உணவை தான் உட்­கொள்­ள­வில்லை என அவர் கூறி­யுள்ளார். இதே­வேளை, விசித்­திர தோற்றத்திலிருந்த உணவானது அவிக்கப்பட்ட கிழங்கு வகையான தாவர உணவே என கான்டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப் பெண் கடந்த வெள்­ளிக்­கி­ழமை சிட்­னி­யி­லி­ருந்து பிறிஸ்பேன் நக­ருக்கு அவுஸ்­தி­ரே­லி­யாவின் கான்டாஸ் விமான சேவை நிறு­வ­னத்தின் விமா­னத்தின் வர்த்த வகுப்பில் பய­ணித்தார்.