வைரஸ் காய்ச்சலா? உடனே இதனை செய்து விடுங்கள்!

மழைக்காலம் என்றாலே சளி, காய்ச்சல், இருமல் என பல நோய்களும் தொற்றிக் கொள்ளும்.

இவற்றையெல்லாம் விரட்டியடிக்க நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் இருக்க வேண்டும்.

அதற்கு தினமும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம்.

காய்ச்சல் வந்துவிட்டால் குறைந்தது மூன்று நாட்களாவது நிலவேம்பு கசாயம் அருந்துவது நல்ல தீர்வை தரும்.

மழைக்காலங்களிலும் நிலவேம்பு கசாயத்தை அருந்துவது காய்ச்சல் உட்பட பல நோய்களில் இருந்தும் பாதுகாக்கும்.

செய்வது எப்படி?

நிலவேம்பு பொடி, சுக்கு, மிளகு, பற்பாடகம், பேய்ப்புடல், சந்தனம், வெட்டிவேர், விலாமிச்சை வேர், கோரைக்கிழங்கு.

ஒரு பாத்திரத்தில் 200 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்த பின்னர், மேற்சொன்ன பொடிக்கலவையை 5 கிராம் அல்லது 1 டீஸ்பூன் அளவு போட வேண்டும். தண்ணீர் 50 மில்லி லிட்டர் என்றளவு வரும்வரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

இந்த மருந்தை 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாராளமாக அருந்தலாம், 10 வயதுக்கு குறைவான நபராக இருப்பின் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ளலாம்.