நமது ஸ்மார்ட்போனின் பாஸ்வேர்டை மறந்து விட்டால் கவலை பட வேண்டாம். எளிமையான வழிமுறையை கடைப்பிடித்து அன்லாக் செய்துவிடலாம். பெரும்பாலும் நமது ஸ்மார்ட்போனை நாம் லாக் செய்து வைத்திருப்போம்.
முக்கியமான தகவல்கள் அடங்கிய பெட்கத்தை ரகசிய எண் போட்டு பாதுகாப்பாக வைத்திருப்போம்.
சில நேரங்களில் நாமே பாஸ்வேர்டை மறந்துவிடுவோம். அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துவிடுவோம். இனி அந்த கவலை வேண்டாம். பாஸ்வேர்ட் மறந்து போனாலும் எளிமையாக அன்லாக் செய்துவிடலாம்.
அதற்கு ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனஜர் என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
இந்த பதிவி இறுதில் உள்ள இணையதளத்திற்கு சென்று கூகுள் கணக்கு மூலம் உள்நுழைய வேண்டும். அதில் உங்கள் போனுடைய லாக் மற்றும் அன்லாக் ஆகிய இரு தேர்வுகள் இருக்கும். நீங்கள் லாக் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் தற்காலிக பாஸ்வேர்டை பதிவு செய்யுங்கள். இப்போது உங்கள் போன் அன்லாக் ஆகியிருக்கும். நீங்கள் வேறு பாஸ்வேர்டை பதிவிட்டு பயன்படுத்தி கொள்ளலாம்.