கிறிஸ்துமஸ் சலுகை: ரூ.999-க்கு விமான டிக்கெட்களை வழங்கும் கோ ஏர் நிறுவனம்!

டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. இந்த வருடத்தின் கடைசி பண்டிகை என்பதால் கிறிஸ்துமசைக் கொண்டாட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சலுகை கட்டணத்தில் விமான டிக்கெட்களை வழங்குவதாக கோ ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த சலுகை கட்டண டிக்கெட்டுகள் ரூ.999-ல் இருந்து தொடங்கி, பயணத்திட்டங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

ஜனவரி மாதம் 9-ம் தேதியிலிருந்து ஏப்ரல் மாதம் 15-ம் தேதி வரை இந்தியாவின் எந்த பகுதிகளுக்கும் இந்த சலுகை கட்டணத்தில் பயணம் செய்யலாம். டிசம்பர் 31-ம் தேதிவரை இதற்கான முன்பதிவினை செய்து கொள்ளலாம்.

முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த சலுகை டிக்கெட்டுகள் வழங்கப்படும் என கோ ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.