கடைக்குச் செல்வதாக கூறிச் சென்ற யுவதி காதலனுடன் பற்றைக்குள் சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் யுவதியின் தந்தையிடம் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார்.
குறித்த யுவதியின் காதலன் கீழ்ப் பகுதி ஆடைகள் அகற்றப்பட்ட நிலையில் சேட்டுடன் தந்தையின் ஆவேசத் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் நடுவீதியால் ஓடித் திரிந்தாக தெரியவருகின்றது.
எழுதுமட்டுவாள் பகுதியில் இன்று காலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
எழுதுமட்டுவாள் பகுதியில் வசிக்கும் குறித்த யுவதி, கடைக்குச் செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். குறித்த யுவதி அப்பகுதிக்கு அண்மையில் வசிக்கும் மனைவியை இழந்த 45 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவருடன் காதல் தொடர்பு கொண்டிருந்துள்ளார்.
அந்தக் குடும்பஸ்தருடன் அப்பகுதிக்குச் சற்றுத் தொலைவில் உள்ள வீதியோரத்துக்கு அண்மையில் இருந்த பற்றைக் காட்டுக்குள் சேர்ந்திருந்த சமயம் அப்பகுதியால் சென்ற யுவதியின் தந்தை அங்கு தனது மகளின் சைக்கிள் அநாதரவாக இருந்ததைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த யுவதியின் காதலன் ஏ9 வீதியால் நீண்ட துாரம் ஓடியதாகவும் யுவதியின் தந்தையும் துரத்தித் துரத்தி தாக்கியதாகவும் தெரியவருகின்றது.
இதனையடுத்து வீதியால் சென்றவர்களும் அப்பகுதியைச் சேர்ந்த சிலரும் தந்தையைத் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தரையும் காயங்களுடன் மீட்டுள்ளனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.