கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், யாழ்பபாணத்தில் கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்கள் விற்பணை சூடுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அலங்கார மின் குமிழ்கள் மற்றும் நத்தார் மரங்கள் என்பன மக்களால் அதிகம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டை பார்கிலும், இந்த ஆண்டு பொருட்களின் விற்பனை சற்று அதிகளவாக இருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடை வகைகள் யாழ் நகரப் புற கடைகளில் குவிந்துள்ள நிலையில் அனைவரும் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.