இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சினிமாத்துறைகளில் பல ஆண்டுகளாக பல்வேறு பிரபலங்களுடன் பணிபுரிந்து இருக்கிறேன். இதில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், ரசிகர்கள் கதையின் கருவை பார்க்கிறார்கள் என்பது தான். ஆகையால், நடிகர்கள் காலையில் எழுந்ததும் ரசிகர்களை மதிக்க வேண்டும்.
இதை தவிர்த்து, ரசிகர்கள் மிகவும் வேடிக்கையானவர்கள், என்னுடைய படத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று அவர்களை குறைவாக எடை போடாதீர்கள். ரசிகர்களால் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்று நான் கருதுகிறேன்.
ஒருவரது வேலைக்கு மதிப்பு கொடுங்கள். எனக்கு கூடுதல் நம்பிக்கை எல்லாம் கிடையாது. இதற்காக நான் வெட்கப்படுகிறேன். மேடைக்கு பின்னால் இருப்பவர்களின் தயவை தான் பெறுகிறேன். நான் மேடை ஏறும்போது, ஏராளமான விஷயங்களை சேகரித்து கொண்டு, தயாராகவே செல்கிறேன். இந்திய சினிமாவை சர்வதேச அளவில் கொண்டு செல்ல நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு ஷாருக்கான் தெரிவித்தார்.