மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சமாதியில் தமிழ் திரையுலகினர் இன்று (23-ந் தேதி) அஞ்சலி செலுத்துகிறார்கள்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் அருகில் இருந்து காலை 11 மணிக்கு அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு செல்கின்றனர். இந்த ஊர்வலத்தில் நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.
அவர்கள் ஜெயலலிதா சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்கள். பின்னர் போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்துக்கு சென்றும் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும் வணங்குகிறார்கள்.
திரையுலகினர் ஊர்வலத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.