ஆஸ்கர் ரேஸில் டோணி!

கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்று படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாறு எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் படமாக வெளியானது. சுஷாந்த் சிங் ரஜ்புட் டோணியாக நடித்திருந்தார்.

படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் 2016ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு 336 படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் டோணி படமும் ஒன்று.

டோணி தவிர ஐஸ்வர்யா ராய் நடித்த சரப்ஜித் படமும் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்திய-அமெரிக்க இயக்குனரான மீரா நாயரின் க்வீன் ஆப் கத்வே படமும் ஆஸ்கர் ரேஸில் உள்ளது.

இந்த படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற லுபிதா நியாங்கோ நடித்துள்ளார். உகாண்டாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.