வவுனியாவில் குடும்பஸ்தர் உண்ணாவிரதத்தில் குதிப்பு!!

வவுனியா – கிராமசேவகர் அலுவலகத்திற்கு அருகில் இன்று குடும்பஸ்தர் ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா பர்நாட்டான்கல் பிரதேசத்தில் 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.

தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளையும் மீட்டுத் தருமாறு கோரி உண்ணாவிரதத்தினை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராம சேவகர் அலுவலகத்தில் உண்ணாவிரதத்தினை அவர் மேற்கொள்ள முயற்சித்த போதும் பொலிஸார் அதற்கு அனுமதிக்காததன் காரணமாக குறித்த குடும்பஸ்தர் அருகிலுள்ள மரத்தின் கீழ் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.