ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா பிரிந்து விட மக்கள் வாக்களித்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தெரசா மே தலைமையிலான அரசு ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் இவர் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து உரையாடினார்.
அப்போது அவர்கள் பல விடயங்களை பற்றி பேசி கொண்டதாக தெரிகிறது. அந்த சமயத்தில் Brexit பற்றிய அடுத்த தகவலை பிரதமர் தெரசாவிடம் ராணி எலிசபெத் கேட்டாராம்.
ஆனால் ராணியிடம் அதை பற்றி எந்த ஒரு விடயத்தையும் தன்னால் கூற முடியாது என பிரதமர் தெரசா மே கூறியுள்ளதாக தெரிகிறது.
இந்த விடயம் இரண்டாம் ராணி எலிசபெத் மற்றும் அவர் கணவர் பிலிப்புக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.