பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது: நீதியமைச்சர்

பௌத்த மதத்திற்கு நாட்டில் வழங்க வேண்டிய இடத்தை அப்படியே முன்னெடுத்துச் செல்வதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வவுனியாவுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மதத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தை அரசாங்கம் இல்லாமல் செய்யாது எனவும் பரவி வரும் பிரசாரங்களில் உண்மையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

சில அடிப்படைவாதிகள் மக்களை தவறாக வழிநடத்தி, பயன்பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அமைச்சர் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.