கணவரை விவாகரத்து செய்யக்கோரி சௌந்தர்யா ரஜினிகாந்த் கோர்ட்டில் மனு!

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வேத் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

அவர்கள் பிரிவுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், தனது கணவர் அஸ்வினை சட்டரீதியாக விவாகரத்து செய்து வைக்குமாறு சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்று சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது. சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி -2’ படத்தை இயக்கவிருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன், விவேக் என முந்தைய பாகத்தில் நடித்த நடிகர்களும் இப்பாகத்திலும் நடிக்கிறார்கள்.