விரைவில் தொழில்முறை மல்யுத்த லீக் தொடர் வர இருக்கிறது. இதற்காக இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாக்சி மாலிக் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சர்வதேச போட்டியில் இந்தியர்கள் ஜொலிக்க வேண்டுமென்றல் வெளிநாட்டு பயிற்சி தேவை என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து சாக்சி மாலிக் கூறுகையில் ‘‘ரியோ ஒலிம்பிக் தொடருக்கு முன் நான் ஸ்பெயின் சென்றிருந்தேன். அங்கு ஏராளமான தரம்வாய்ந்த மல்யுத்த வீராங்கனைகளுடன் பயிற்சியில் ஈடுபட்டேன்.
சிறந்த வகையில் நம்முடைய ஆட்டத்தை வெளிப்படுத்த வெளிநாட்டு மண்ணில் இரண்டிற்கும் மேற்பட்ட பயிற்சி முகாமில் கலந்து கொண்டு முன்னணி மற்ற நாட்டு வீரர்களுடன் பலப்பரீட்சை நடத்த வேண்டும்’’ என்றார்.
மேலும், ‘‘காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டி என்னுடைய முக்கியமான குறிக்கோள். நான் கடந்த இரண்டு மாதங்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். பயிற்சி நன்றாக சென்று கொண்டிருக்கிறது. என்னுடைய 58 கிலோ எடைப்பிரிவு என்பதை மாற்றிக் கொள்ளும் எந்த எண்ணமும் இல்லை’’ என்றார்.
ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் 58 கிலோ எடைப்பிரிவு பெண்கள் பிரிவில் சாக்சி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.