போர்ப்ஸ் இந்தியா பத்திரிகை, 2015 அக்டோபர் முதல் 2016 செப்டம்பர் வரையிலான காலத்தில் கிடைத்த வருமானம் மற்றும் புகழ் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் 100 இந்திய பிரபலங்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், வருவாய் அடிப்படையில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். இவரது வருவாய் ரூ.270 கோடியாக இருக்கிறது.
இதனையடுத்து முதலிடத்தில் இருந்த ஷாருக்கான் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளார். ஷாருக்கானின் வருவாய் ரூ.222 கோடி ஆகும். எனினும், ‘புகழ்’ அடிப்படையில் பார்க்கும்போது சல்மான்கான் இரண்டாவது இடத்திலும், ஷாருக்கான் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். முதலிடத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இருக்கிறார்.
போர்ப்ஸ் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 4-வது இடத்தில் இருக்கிறார். அவரது வருவாய் ரூ.203 கோடியாக உள்ளது. கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி வருவாய் அடிப்படையில் ஐந்தாவது இடத்திலும், புகழ் அடிப்படையில் 4-வது இடத்திலும் இருக்கிறார்.
போர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் இடம் பெற்றுள்ள 100 பிரபலங்களின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.2,745 கோடியாக உள்ளது. இதில், சல்மான் கான் ஈட்டிய வருமானத்தின் பங்கு 9.84 சதவீதமாகும்.