தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சரண்யா பொன்வண்ணன் தான்.
முன்னணி இளம் நடிகர்கள் அனைவருக்குமே அம்மாவாக நடித்துள்ளார். இவர் தற்போது அச்சமின்றி என்ற படத்தில் நெகட்டிவான கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்துள்ளாராம்.
என்னமோ நடக்குது படத்தை எடுத்த ராஜபாண்டி இயக்கும் இப்படத்தில் விஜய் வசந்த் நாயகனாக நடிக்கிறார்.
இதுபற்றி சரண்யா கூறுகையில், கதையை கேட்கும்போதே பயந்தேன், நெகட்டிவ் கதாபாத்திரம் எனக்கு பொருந்தாது என்றேன், படப்பிடிப்புக்கு முதல்நாள் கூட இயக்குனருக்கு போன் செய்து நடிக்கலை என்றேன். அவர் என்னை நம்பிக்கையோடு நடிக்க வைத்தார் என்று கூறியுள்ளார்.
பாசக்கார அம்மாவாக நடித்த இவருக்கு வில்லித்தனம் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.