சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ்டர்பீஸ் படங்களில் ஒன்று பாட்ஷா. இப்படத்தின் கதையைத்தான் இப்போது வரை பல இயக்குனர்கள் மாற்றி தங்கள் படத்தை இயக்கி வருகின்றனர்.
சத்யா மூவீஸ் தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தேவாவின் இசையில் வெளியான இப்படம் இன்றளவும் அனைவரையும் ரசிக்க வைக்கிறது.
இப்படத்தை மீண்டும் டிஜிட்டலுக்கு மாற்றி 5.1 ஒலி வடிவத்துடன் உருவாக்கியுள்ளனர். இந்த டிஜிட்டல் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனால் இப்படத்தை விரைவில் வெளியிடவுள்ளனர்.
ஜப்பான் ரசிகர்களும் இப்படத்தை வெகுவாக எதிர்பார்ப்பதையொட்டி ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கும் வேலைகள் நடைபெற்று வருகிறதாம். மற்ற நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகவுள்ளதாம்.