பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சமீபத்தில் மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
இதில் அவர் மேடையில் பேசிய போது, நடிகர்கள் ரசிகர்களை மதிக்க வேண்டும். அவர்கள் நம் படத்தின் கதை கருவை எதிர்ப்பார்க்கிறார்கள்.
நம்முடைய படத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என குறைத்து மதிப்பீடு செய்யக்கூடாது. ரசிகர்களால் தான் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
உங்கள் முன் பேசும் போது பல விஷயங்களை சேகரித்து கொண்டு தான் பேசுகிறேன். மேடைக்கு பின்னால் இருக்கும் ரசிகர்களின் தயவு எனக்கு கிடைத்துள்ளது.
சினிமாவில் நிறைய ஆண்டுகள் பணியாற்றியதால் எனக்கு இந்த அனுபவம் கிடைத்துள்ளது என அவர் கூறினார்.
ஷாருக்கான் இந்த வருடம் பேன் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.