இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட உள்ள உத்தேச எட்கா உடன்படிக்கையானது இலங்கைக்கு முக்கியமானது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தொழில் வாய்ப்புகள் உட்பட பல நன்மைகள் இந்த உடன்படிக்கையினால் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சிறப்பு அதிகாரம் கொண்ட அமைச்சர் உருவாக்கப்பட உள்ளதாக கூறி சிலர் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களுக்கு தேவையான வசதிகளை இலகுவாக செய்து கொடுக்கும் நோக்கில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.