முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு நேற்றைய தினம் அழைக்கப்பட்டு 2 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வீரகெட்டிய திட்டம் என்ற பெயரில் திட்டம் ஒன்றை ஆரம்பித்து அதன் ஊடாக டீ.ஏ.ராஜபக்ச மற்றும் அவரது மனைவியின் கல்லறையை பழுது பார்ப்பதற்காக 9 கோடி செலவிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கும், கையொப்பத்தை ஆராய்வதற்காகவும் கோத்தபாய அழைக்கப்பட்டிருந்தார்.
கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக செயற்பட்ட காலப்பகுதியில் அப்போதைய அமைச்சின் கீழ் காணப்பட்ட காணி மீட்டல் மற்றும் மேம்பாட்டு கூட்டுத்தபானத்தின் ஊடாக இந்த 9 கோடி ரூபாய் பணம் டி.ஏ.ராஜபக்ச அறக்கட்டளைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர் அதனை தவிர டீ.ஏ.ராஜபக்ச மற்றும் அவரது மனைவியின் கல்லறையை பழுதுபார்த்து அந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக அந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசாரணை மேற்கொண்டு அதற்கான விசாரணையை நிறைவு செய்து சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக விசாரணை ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் நேற்று கோத்தபாய ராஜபக்சவை அழைத்து இவ்வாறு வாக்குமூலம் ஒன்று பெற்றுக் கொண்டதாக நிதி மோசடி விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.