புலம்பெயர் தமிழர்களை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!!

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர் தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி உண்ணா விரதப் போராட்டம் ஒன்றில் நேற்று(23) ஆரம்பித்தனர் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், 11 புலம்பெயர் தமிழர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாகப் படகு மூலம் இவர்கள் செல்ல முயற்சித்தார்கள் என நாகர் கோயில் கியூ பிரிவு பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, குறித்த புலம்பெயர் தமிழர்கள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் சிலர் படகு மூலம் தப்பிச் செல்லவும் முயற்சித்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.