பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனியார் ஊடகங்கள் மீது கடும் வெறுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் செய்திகளை தனியார் ஊடகங்களுக்கு வழங்குவதில்லை என பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார்.
மேலும் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெறும் எந்த வைபவத்திற்கும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பொலிஸ் மா அதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பான சம்பவத்தை தேவையற்ற வகையில் ஒளிபரப்பியமையே பொலிஸ் மா அதிபரின் வெறுப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.