வயோதிபத் தம்பதியினரின் கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி அவர்களிடமிருந்த இருபத்தொரு பவுண் தங்க நகைகள் நான்கு பேர் கொண்ட கொள்ளையர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இக்கொள்ளைச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் பருத்தித்துறை – யாழ்ப்பாண வீதியில் உள்ள சிறுப்பிட்டி எரிபொருள் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள வீட்டில் நடைபெற்றுள்ளது.
அதிகாலை வேளையில் வீட்டினை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள் உறக்கத் தில் இருந்த 65 வயதுடைய வயோதிப தம்ப தியினரின் கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி அவர்களிடமிருந்த இருபத்தொரு பவுண் நிறையுடைய தங்க நகைகள், சீடி பிளேயர் ஒன்று, டோச் என்பவற்றை கொள்ளையடி த்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அச்சுவேலிப் பொலிஸாருடன் நெல்லியடி குற்றத் தடுப்பு பொலிஸாரும் இணைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.எனினும் நேற்று இரவு வரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இதேவேளை குடத்தனைப் பகுதியில் வயோதிபப் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த தங்க நகைகள் அபகரிக்கப்பட்டு நான்கு நாட் களுக்குள் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை யால் மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.