இன்றைய ராசி பலன்கள் 25.12.2016

  • மேஷம்

    மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள்-. தாய்வழியில்  மதிப்புக் கூடும். புது வேலை அமையும். வியா பாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பாராத சந்திப்பு  நிகழும். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அமோகமான நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உங்கள் உறவினர்களில் உண்மையானவர்களை நீங்கள் கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம்  வீட்டாரின் ஆதரவு பெருகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். கனவு நனவாகும் நாள்.

  • கடகம்

    கடகம்: பழைய பிரச்னை களுக்கு சுமூகமான தீர்வு கண்டறிவீர்கள்.  உங்கள் தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.  வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும்.  புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள்.  சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்.

  • துலாம்

    துலாம்:  ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். விமர்சனங்களை  கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் உங்களுக்கு வந்து நீங்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வெளிவட்டாரத்தில் அலைச்சல்  அதிகரிக்கும். எதிர்பாராத பயணம் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். போராடி வெல்லும் நாள்.

  • தனுசு

    தனுசு: எதையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு  கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். இனிமையான நாள்.

  • மகரம்

    மகரம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்களால்  அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரம் செழிக்கும். திட்டம் நிறைவேறும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: கணவன்-மனைவி க்குள் அன்யோன்யம் பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.  புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

  • மீனம்

    மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்க பாருங்கள். உதவிக் கேட்டு உறவினர்களும்  தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.