இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை கச்சத்தீவில் மூழ்கிப்போனது!

இலங்கை இந்திய மீனவர்களுக்கு மத்தியில் இருந்துவந்த பிரச்சினைகள் கச்சத்தீவில் மூழ்கிப்போனதாக தி ஹிந்து தெரிவித்துள்ளது

கச்சத்தீவில் அமைக்கப்பட்ட புதிய தேவாலயத்தின் அங்குரார்ப்பண பணிகள் நேற்று நடந்தன.

இதன்போது இலங்கையின் கடற்படை தளபதி தேவாலயத்தை யாழ்ப்பாண ஆயரிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் இந்தியாவில் இருந்து 82 அடியார்கள் பங்கேற்றனர்.

காலை 6.50க்கு கச்சத்தீவுக்கு வந்த அவர்கள், பிற்பகல் 3.45க்கு புறப்பட்டு சென்றனர். இவர்களின் பயண ஏற்பாடுகளை ஆட்சியர் எஸ் நடராஜன் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் என் மணிவண்ணன் ஆகியோர் மேற்கொண்டனர்.

இந்தநிலையில் கச்சத்தீவு தேவாலயம் நல்லிணக்க தேவாலயம் என்று யாழ்ப்பாண ஆயர் வணக்கத்துக்குரிய ஜஸ்டின் ஞானப்பிரகாசம் நிகழ்வின் போது தெரிவித்தமையையும் தி ஹிந்து கோடிட்டுள்ளது