ஒற்றையாட்சிக்கு கேடு விளைவிக்கும் அரசியல் அமைப்பு தேவையில்லை : ஜனாதிபதி

நாட்டின் ஒற்றையாட்சிக்கு பங்கம் விளைவிக்கும் அரசியல் அமைப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதாக நுவன் பலன்துவதெரிவித்துள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்ட உலக இலங்கை மன்றத்திடம் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் நுவன் பலன்துவ குறிப்பிட்டுள்ளார்.

செனட் சபையொன்றை உருவாக்குதல் மற்றும் ஆளுநருக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துதல் உள்ளிட்ட உப குழுக்களின் பரிந்துரைகள் ஒற்றையாட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளமை குறித்து கேள்வி எழுப்பிய போதே ஜனாதிபதி இந்த உறுதி மொழியை வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.