கடந்த ஒரு வருட காலமாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு (எப்.சி.ஐ.டி.) நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் பிரபல அரசியல்வாதிகள் சிலர் உட்பட 35 பேருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் 22 தீவிர விசாரணைகள் நடத்தப்பட்ட பின் 65 விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக சமர்ப்பிக்கப்பட்டன எனவும், அவரது அறிவுறுத்தலின் பிரகாரம் 35 பேருக்கு எதிராக தற்சமயம் வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.