கொழும்பு கோட்டையில் உள்ள குற்றப்புலனாய்வு பொலிஸாரின் நான்காம் மாடி கட்டிடம்மாற்றப்படவேண்டியது அவசியம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மக்கள் மத்தியில் நான்காம் மாடி குறித்து அச்சம் உள்ளதாக பொதுமக்கள்பாதுகாப்புத்துறை அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
4ம் மாடியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறை நவீனமயப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும்அவர் வலியுறுத்தியுள்ளார்.