இந்தியாவை விட சீன விமானங்களில் ரூ. 25 ஆயிரம் வரை குறைவாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தற்போது வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமான பயணம் மேற்கொள்ளப்படுகிறது. அதே போன்று விமான கட்டணமும் அதிகமாகவே உள்ளது. ஆனால் இந்தியாவில் இருந்து புறப்படும் சீன விமானங்கள் மற்ற நாடுகளின் விமானங்களை விட குறைவாகவே கட்டணம் வசூலிக்கின்றன.
பெரும்பாலான சீன விமானங்கள் டெல்லியில் இருந்து புறப்படுகின்றன. அவை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா, அமெரிக்கா ஆகிய வட அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு புறப்பட்டு செல்கின்றன.
அவற்றில் ரூ .20 ஆயிரம் முதல் ரூ 25 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனா மற்றும் ஜப்பான் விமானங்கள் இடையே ரூ. 15 ஆயிரம் முதல் ரூ . 20 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் குறைவாக உள்ளது.
சீனா- இந்தியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி இரு நாடுகளுக்கும் இடையே வாரத்துக்கு 10 ஆயிரம் தடவை விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன.
தற்போது ஹாங்காய் சீனாவசம் உள்ளது. அங்கிருந்து அதே பசிபிக் மற்றும் கதே டிராசன் ஆகிய விமானங்கள் 6 இந்திய நகரங்களில் இருந்து வாரத்துக்கு 48 தடவை புறப்பட்டு செல்கின்றன.
இந்தியாவில் இருந்து அமெரிக்கா- ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்துக்கு செல்லும் 60 முதல் 70 சதவீத பயணிகள் சீனாவின் ஹாங்ஷூ வழியாகவே செல்கின்றனர். ஏனெனில் இந்தியர்கள் ‘கனெக்ஷன்’ விமானத்துக்கு 2 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க விரும்புவதில்லை.
விமான நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள தொழில் போட்டி காரணமாகவே சீன விமானங்கள் இந்தியர்களுக்கு கட்டண சலுகை வழங்கியுள்ளதாக தெரிகிறது.