இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நாளை தொடங்குகிறது.
சொந்த மண்ணில் விளையாடுவதால் தென்ஆப்பிரிக்கா இந்த டெஸ்ட் தொடரை எளிதில் கைப்பற்றும். இலங்கை அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் சவாலாக இருக்கும். இரு அணிகள் இதுவரை 22 டெஸ்டில் மோதியுள்ளன.
இதில் தென்ஆப்பிரிக்கா 11 டெஸ்டிலும், இலங்கை 5 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 6 டெஸ்ட் `டிரா’ ஆனது.