2016-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு சென்னையை சேர்ந்த ஆர்.அஸ்வின் தேர்வு செய்துள்ளார்.
ஆண்டின் சிறந்த வீரர், மற்றும் டெஸ்டின் சிறந்த வீரர் ஆகிய இரட்டை ஐ.சி.சி. விருது அவருக்கு வழங்கப்பட்டது.
ஐ.சி.சி. விருது கிடைத்தது தனக்கு மிகுந்த பெருமை அளித்தது என்று அஸ்வின் குறிப்பிட்டார். தனது மனைவி, பெற்றோர், பயிற்சியாளர்கள் கும்ப்ளே, சங்கர் பாசு, டெஸ்ட் கேப்டன் வீராட்கோலி ஆகியோருக்கு அஸ்வின் நன்றி தெரிவித்து அவர்களது பெயரை குறிப்பிட்டார்.
ஆனால் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கேப்டனான டோனி பெயரை அஸ்வின் குறிப்பிடவில்லை. டோனியின் பெயரை மறந்து அவர் குறிப்பிடாமல் விட்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அஸ்வினின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்து உள்ளார். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்சிடம், இந்திய அணியிலும் அஸ்வினை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து கொண்டு சென்றவர் டோனி என்பது குறிப்பிடத்தக்கது.