தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர் அஸ்விரோ பீட்டர்சன் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய அவர் உள்ளூர் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதுபற்றி விசாரித்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், அஸ்விரோ பீட்டர்சன் மேட்ச் பிக்சில் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்று உறுதி செய்து அவருக்கு 2 ஆண்டு தடை விதித்தது.
இந்த நிலையில் சூதாட்ட கும்பலால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பீட்டர்சன் தெரிவித்து உள்ளார்.
கிரிக்கெட்டில் நடைபெறும் சூதாட்டத்தை கிரிமினல் கும்பல் செய்து வருவதை அறிவேன். இதனால் எனது உயிருக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக பயப்படுகிறேன்.
ஆனால் பாதுகாவலர்களை நியமிக்க இருக்கிறேன் என்றார். பீட்டர்சனுக்கு 2018-ம் ஆண்டு நவம்பர் 12-ந்தேதிவரை தடை அமலில் இருக்கும். அவர் சர்வதேச, உள்ளூர் போட்டிகள் எதிலும் விளையாட முடியாது.