இந்நிலையில், சமீபத்தில் இப்படத்திற்கு சத்ரியன் என்று தலைப்பு வைக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தது. இருப்பினும், படக்குழுவினர் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் சொல்லாமலே இருந்து வந்தனர். இந்நிலையில், ‘சத்ரியன்’ தலைப்பு வைக்கப்படுவதாக வெளிவந்த செய்திக்கு இயக்குனர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, என்னுடைய அடுத்த படமான ‘முடிசூடா மன்னன்’ படத்தின் தலைப்பு மாற்றப்படுவது உண்மைதான். இப்படத்திற்கு ‘சத்ரியன்’ என்று தலைப்பு வைத்துள்ளோம். இந்த தலைப்பை புத்தாண்டு அன்று சொல்வதாக இருந்தோம். ஆனால், இதைப் பற்றி அறிந்த நண்பர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் இப்படத்தின் தலைப்பை வெளியிட்டு விட்டார் என்று கூறியுள்ளார்.
‘சத்ரியன்’ என்ற தலைப்பு ஏற்கெனவே விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த படம். இப்படத்தை மறைந்த இயக்குனர் சுபாஷ் இயக்கியிருந்தார். மணிரத்னம் கதை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.