ஆயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட சுனாமி,பேரழிவு இடம்பெற்று 12 வருடங்கள் ஆகிவிட்டன. 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி சுனாமி பேரலை ஏற்பட்டது.
வரலாற்றில் இந்து சமுத்திரத்தில் தோன்றிய மிகப் பெரிய இயற்கை பேரழிவாக சுனாமி பதிவாகியது. தாய்லாந்து,இந்தோனேசியா,இந்தியா மற்றும் இலங்கையை சுனாமி தாக்கியது.
இந்த நிலையில் முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் தங்கள் இரங்கல்களையும் அஞ்சலிகளையும் தெரிவித்துள்ளனர்.
தங்களது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கிலேயே குறித்த இரங்கல் செய்தியை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இலங்கை 12 வருடங்களுக்கு முன்னர் மோசமான பேரழிவு ஒன்றை எதிர்நோக்கியது.
ஆசியாவில் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களை இன்றைய தினம் அனைவரும் நினைவுகூருகின்றனர்.
உயிரிழந்த அனைவரினதும் ஆத்மாக்கள் அமைதியடைய வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.