ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை முடிவுக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் பிரபல பாடசாலையில் சாதாரண தர மாணவனின் கழுத்தை பிடித்து, கமால் குணரத்ன அச்சுறுத்தல் விடுத்ததாக குருந்துவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குருந்துவத்தை பொலிஸ் நிலையத்திற்கு வந்து குறித்து மாணவனுடன் சமாதானமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய கமால் குணரத்னவுக்கு எதிராக மாணவர் மேற்கொண்ட முறைப்பாடு மாணவனினால் நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் சம்பவம் இடம்பெற்ற டிசம்பர் மாதம் 14ஆம் திகதி தான் இலங்கையில் இருக்கவில்லை எனவும், வெளிநாட்டில் வசித்ததாகவும், கமால் குணரத்னவின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் பொலிஸ் நிலையத்தில் வைத்து தனது உறவினரின் கோரிக்கைக்கமைய சம்பவம் இடம்பெற்ற 14ஆம் திகதி அந்த பாடசாலைக்கு சென்றதாக கமல் குணரத்ன ஏற்றுக் கொண்டுள்ளார்.
அத்துடன் மாணவர் கடந்த 17ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதுடன், கமால் குணரத்ன 12ஆம் திகதியே இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.