மர்ம நபர்களினால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு..

கதான கட்வெல பிரதேசத்தில் 2 பொலிஸ உத்தியோகஸ்தர்கள் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளனர்.

கட்டான கடியல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவந்தவர்களே இவ்வாறு நேற்று இரவு துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளனர்.

நேற்று இரவு சந்தேகமான முறையில் இருந்துள்ள இரண்டு பேரை பரிசோதனை செய்துள்ள போது மற்றும் ஓர் நபர் பொலிஸ் உத்தியோகஸ்தரின் துப்பாக்கியை, பையில் இருந்து கைப்பற்றி இந்த துப்பாகிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் வீதியில் பயணித்த மற்றுமொருவரின் மோட்டார் சைக்கிளையும் அபகரித்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், காயமடைந்துள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நீர் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.