மத்திய அரசு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது. இதனால் அப்பணத்தை மக்கள் மாற்றி வருகிறார்கள். போதுமான பணம் அச்சிடாததால் பணத்தட்டுபாடு நிலவி கருகிறது. பணத்தை மாற்றிக் கொள்ளவதற்கான கெடு வரும் 30-ந்தேதியுடன் நிறைவடைகிறது. அந்நாளில் இருந்தே பணத்தட்டுப்பாடு பிரச்சினை தீர்ந்து விடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், டிசம்பர் 30-ந்தேதியோடு பணத்தட்டுப்பாடு முடிவுக்கு வராது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில்,
டிசம்பர் 30-ந்தேதிக்குப் பிறகு பணத் தட்டுப்பாடு பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று மோடி சொல்கிறார். ஆனால் தட்டுப்பாடு 30-ந்தேதியோடு முடிந்து விடாது என்பதை என்னால் உறுதியோடு சொல்ல முடியும். இந்த கடிமான நிலை ஆறு ஏழு மாதங்கள் அல்லது அதற்கு மேலாகவும் நீடிக்கும்.
நோட்டு ஒழிப்பு ஊழலுக்கு எதிரானதல்ல. இதனால் பொருளாதாரம் முடங்கியுள்ளது. கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கை அல்ல. ஏழை மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரானது’’ என்றார்.