கையில்லாத மேலாடையை அணிந்து வந்த பெண்னை விரட்டிய நாடாளுமன்ற அதிகாரிகள்!

கையில்லாத வகையில் மேலாடை (ரவிக்கை) அணிந்து வந்த பெண் பணியாளர் ஒருவரை இலங்கையின் நாடாளுமன்ற அதிகாரிகள் அண்மையில் தடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்துக்கு உரிய வகையில் அவர் கையை பாதியளவில் மறைக்கக்கூடிய ரவிக்கையை அணியாமல் வந்தமையே இதற்கான காரணமாகும்.

நாடாளுமன்றத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் சாரியுடன் நீளமான ரவிக்கையை அணிந்து வர வேண்டும் என்று நியதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பெண் பணியாளர் தடுக்கப்பட்டமை புதிய விடயம் அல்ல.

ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிராமன் சல்வார் அணிந்து வந்தநிலையில் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியில் போகுமாறு கேட்கப்பட்டார்

ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஞ்சான் உம்மா, அபாயா அணிந்து வந்தநிலையில் முன்கூட்டியே பெற்றுக்கொண்ட அனுமதியின் அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.