ரயில் சேவைக்கு நாளையுடன் 152 ஆண்டுகள் நிறைவு!

நாட்டில் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு நாளையுடன் 152 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

முதலாவது ரயில் சேவை 1864ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 27ஆம் திகதி கொழும்புக்கும், அம்பேபுஸ்ஸவுக்கும் இடையில் ஆரம்மமானது.

இதன்போது ஜி.எல்.மொலஸ்வன் என்பவரே ரயில்வே பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியுள்ளார். இவர் ஆரம்பித்து வைத்த முதலாவது சேவையில் 84 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.