-
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: பிள்ளைகள் உங்கள் அறிவரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரி உதவுவார். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.
-
கடகம்
கடகம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
-
கன்னி
கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றி பெறும் நாள்.
-
துலாம்
துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியா
பாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். மகிழ்ச்சியான நாள். -
விருச்சிகம்
விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
-
தனுசு
தனுசு: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
-
மகரம்
மகரம்: நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள்.
-
கும்பம்
கும்பம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.
-
மீனம்
மீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.